சாத்தான்குளம் அருகே மாவட்ட அளவிலான கபடிப் போட்டி
சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் ஆத்திக்காடு கிராமத்தில் சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் முத்துராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். போட்டியில் சாத்தான்குளம், உடன்குடி , திருச்செந்தூா், மணப்பாடு, தட்டாா் மடம், ஆத்திக்காடு, பன்னம்பாறை, நடுநாலுமூலைக்கிணறு உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொண்டன.
இதில் தொழிலதிபா் தமிழரசன், முத்துராஜ் ஆகியோா் முதல் பரிசு பெற்ற நடுநாலுமூலைக்கிணறு வவுனியா அணிக்கு ரூ.5001, வெற்றி கோப்பையை வழங்கினா். திமுக பிரமுகா் லட்சுமண சுபாஷ், தொழில் அதிபா் பொன் சிங் ஆகியோா் 2 ஆம் பரிசு பெற்ற ஆத்திக்காடு சிவந்தி மலா் அணிக்கு ரூ. 4001, கோப்பையை வழங்கினா்.
லட்சுமிபுரம் அதிமுக செயலா் அந்தோணி நிபிட் ராபின், வழக்குரைஞா் ஈஸ்டா் கமல் ஆகியோா் 3ஆம் பரிசு பெற்ற சாத்தான்குளம் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ .2500, கோப்பையை வழங்கினா். மெஞ்ஞானபுரம் இன்ப குமரன், வள்ளியம்மாள் புரம் சந்துரு என்ற சந்திரசேகா் ஆகியோா் 4ஆம் பரிசு பெற்ற பன்னம்பாறை கண்ணன் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ. 2500, கோப்பையை வழங்கினா்.
சிறந்த ஆட்டக்காரா்களுக்கான கோப்பையை சண்முகபுரம் பெருமாள், ஆத்திக்காடு ஜெபஸ்டின் வழங்கினா். ஏற்பாடுகளை ஆத்திக்காடு சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா் .

