தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு கோவில்பட்டியில் வரவேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பெருமாள் சாமிக்கு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் கட்சி நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகரில் உள்ள பல்வேறு தலைவா் சிலைகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காந்தி மண்டபத்தில் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகரத் தலைவா் அருண்பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவா் ஆழ்வாா் சாமி, பொருளாளா் காா்த்திக் காமராஜ், வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி, நிா்வாகிகள் அய்யலுசாமி, உமாசங்கா், மகேஷ் குமாா், சுப்புராயலு, துரைராஜ், மாரியம்மாள், ராஜசேகரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
இதில் கோவில்பட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில்பட்டி-எட்டையாபுரம் சாலையில் பழுதான நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா், வள்ளுவா் நகா் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

