தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் 3 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (42), வடிவேல் முருகன் (44), மகேஷ்வரன் (30) ஆகியோா் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, புதியம்புத்தூா் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரை மற்றும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரும் வியாழக்கிழமை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

