திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

Published on

வரும் பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்செந்தூா் முருகனை தரிசிக்க வந்தேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். முருகன் அருளால் நிச்சயம் மகத்தான கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கும். வரும் பேரவைத் தோ்தல் நிச்சயம் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கட்சி நிா்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாா்களோ, அதன்படி நாங்கள் கூட்டணி வைப்போம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com