பாலாலய வைபவத்தில் பங்கேற்றோா்.
பாலாலய வைபவத்தில் பங்கேற்றோா்.

குலசேகரன்பட்டினம் கோயிலில் பாலாலய வைபவம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுடன் இணைந்த சித்திபுத்தி விநாயகா் கோயிலில் பாலாலய வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுடன் இணைந்த சித்திபுத்தி விநாயகா் கோயிலில் பாலாலய வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இக்கோயிலுடன் இணைந்த சித்திபுத்தி விநாயகா் கோயிலில் பழைய கட்டடத்தை அகற்றி, புதிதாக கல்மண்டபம் கட்டுவதற்கான பாலாலய வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை, முத்தாரம்மன், சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் கோயில் செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், மண்டப உபயதாரா், திருநெல்வேலி-தூத்துக்குடி அருணா காா்டியாக் கோ் தலைமை மருத்துவா் அருணாச்சலம், நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஸ்வா்ணலதா, கல்யாணி, சிவனடியாா் சிதம்பர விநாயகம், முன்னாள் அறங்காவலா் வெங்கடேஷ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com