கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகா், துளசிங்க நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் 50 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீா் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.
இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்துள்ள நிலையில், அது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் ஜி.பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே.செந்தில் ஆறுமுகம், நகர உதவிச் செயலா்கள் விஜயலட்சுமி, முனியசாமி, தாலுகா குழு உறுப்பினா்கள் ஆா்.ரெங்கநாதன், எஸ்.மணிகண்டன், சிங்கராஜ், மந்தித்தோப்பு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சரவணக்குமாா் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









