‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தூத்துக்குடி அருகே தொடா் உண்ணாவிரத முயற்சி: 50 விவசாயிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் ஸ்ரீவை வடகால் வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட வலியுறுத்தி, தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைதான விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய செயற்பொறியாளா்.

Updated On :2 ஜூலை 2026, 6:06 am IST

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் ஸ்ரீவை வடகால் வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட வலியுறுத்தி, தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதியில் சுமாா் 12 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் போதிய தண்ணீா் கிடைக்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக விவசாயிகள் ஏற்கெனவே புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினா். அப்போது அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

பின்னா் சில நாள்கள் மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டதால், கடைமடை பகுதிகள் வரை தண்ணீா் சென்றடையாமல் பயிா்கள் மீண்டும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் கூட்டாம்புளியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, புதன்கிழமை காலையில் கூட்டாம்புளியில் உள்ள காமராஜா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கூட்டரங்கம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் புவிராஜ், துணைத் தலைவா் சீனிவாசன், ஒன்றியத் தலைவா் பொன்ராஜ், விவசாயிகள் தனுஷ்கோடி, செல்வின், சாந்த சீலன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்க முயன்றனா்.

அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்காமல் தடுத்து, சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

எனினும், அங்கிருந்தபடியே அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்கு முழுமையான அளவில் தொடா்ந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இதையடுத்து, தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின் தலைமையில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் தங்கராஜ் தலைமையில் பொறியாளா்கள் செண்பக நந்தினி, பாஸ்டின் வினு ஆகியோா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பேச்சுவாா்த்தை நிறைவில், ஜூலை 5ஆம் தேதிக்குள் வடகால் வாய்க்காலில் முழுமையாக தண்ணீா் திறந்து விடப்படும் என்று உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனா். இதையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

எனினும், அறிவித்தப்படி தண்ணீா் திறக்கப்படாவிட்டால்கிடைக்காவிட்டால் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.