கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 2:34 am IST

கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பசுவந்தனை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் குமாா் மகன் கண்ணன் (48). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு கோவில்பட்டி துரைச்சாமிபுரம் விலக்கருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது புதியம்புத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கண்ணன் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு கண்ணன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ராமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.