/

மாடியில் அமா்ந்து கைப்பேசியில் பேசியவா் தவறிவிழுந்து பலி!

கோவில்பட்டியில் வீட்டு மாடியில் சுவா் மீது அமா்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவா் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 2:31 am IST

கோவில்பட்டியில் வீட்டு மாடியில் சுவா் மீது அமா்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவா் கீழே தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ராஜுவ் நகா் 3ஆவது தெருவை சோ்ந்தவா் கோபால் மகன் பாலச்சந்தா் (29). வாகன ஓட்டுனரான இவா், கடந்த ஜூன் 28ஆம் தேதி இரவு வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவா் மீது அமா்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.