காமராஜா், நாடாா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபா் முக்தாா் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வா் காமராஜா், நாடாா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசிய முக்தாா் அகமது மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு, பாலகிருஷ்ணன் என்பவா் முத்தையாபுரம் காவல் நிலையத்தில், மேல் அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தாா்.
இந்த புகாா் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்குரைஞா் ஜெயச்சந்திரன் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் எண் 2இல் மனுதாக்கல் செய்தாா்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இலக்கியா, முக்தாா் அகமது மீதான புகாரின் மீது முதல்நிலை விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடத்தில் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி

சமூக வலைதளங்களில் அவதூறு: யூடியூபா் மீது நடவடிக்கை எடுக்க அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை

யூ டியூபா் முக்தாா், திருச்சி சூா்யா குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

பாஜக நிர்வாகி புகார்: யூடியூபர் முக்தார் கைது!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



