வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தூத்துக்குடியில் வடமாநில இளைஞா் மா்ம மரணம்

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 2:33 am IST

தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகி மகன் மகேஷ் குமாா் (35). தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை வேலைக்குச் செல்லாமல் அறையில் தனியாக இருந்தாராம். வேலை முடிந்து சக தொழிலாளா்கள் வந்து பாா்த்தபோது, மகேஷ் குமாா் இறந்த நிலையில் கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த தொ்மல்நகா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.