5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

தூத்துக்குடியில் அங்கன்வாடி மையங்கள், கிரிக்கெட் மைதானம் திறப்பு

News image

கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்து போட்டியை தொடங்கிவைத்தாா் அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :6 ஜூலை 2026, 2:25 am IST

எஸ்.இ.பி.சி.பவா் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட குரூஸ்புரம், விவேகானந்தா் காலனி, அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் தலா ரூ.15.34 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக் கட்டடங்களை, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில், தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தருவை விளையாட்டு மைதானத்தில் ரூ. 49.85 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டா்ஃப் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து கிரிக்கெட் போட்டியை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்ரி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயரத்தினராஜா, தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணிஸ்டாலின், முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி நரேந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.