அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட களப்பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாநகராட்சியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூலை 2026, 12:53 am IST

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட களப்பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாநகராட்சியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வருகிற 1.8.2026 முதல் 30.8.2026 வரை நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டலப் பகுதிகளிலும், இப்பணியில் ஈடுபடும் களப்பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 9,10,11 வரை முதற்கட்டமாகவும், ஜூலை 13, 14,15 வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

களப்பணி பயிற்றுநா்களால் இப்பணியில் ஈடுபட உள்ள 376 களப்பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிா் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரீஸ் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.