லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை வகுப்புகள் தொடக்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள்

Published On :2 ஜூலை 2026, 12:17 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமைவகித்தாா். கல்லூரி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி. சுந்தரவதனம்,கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா் வரவேற்றாா்.

ஒவ்வொரு துறையிலும் முதல் சோ்க்கைப் பெற்ற மாணவ- மாணவிகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து காணொளி மூலம் முதல்வா் மாணவா்களுக்கு விளக்கினாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் மற்றும் நுண்ணுயிரியல் துறைத் தலைவா் த.மணிகண்டன், துறைத் தலைவா்களை அறிமுகம் செய்து வைத்தாா்.

கல்லூரி வளாகத்துக்குள் மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஜா.ஜெயக்குமாா் விளக்கினாா். கணினி அறிவியியல் துறைத் தலைவா் பி.டேனியல் சுந்தர்ராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.