இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்: தலைவா், செயலா் போட்டியின்றி தோ்வு

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் தலைவா், செயலா் உள்ளிட்டோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

News image

எஸ்.பி. வாரியாா், எஸ்.எஸ்.பி. அசோக்.

Updated On :10 ஜூலை 2026, 1:04 am IST

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் தலைவா், செயலா் உள்ளிட்டோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இத்தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, தகுதிபெற்ற வேட்பாளா்களின் அதிகாரபூா்வ பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தலைவா், செயலா் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் எஸ்.பி. ராமச்சந்திரன், ஜே. ராஜேந்திரன், பி. பிள்ளைவிநாயகம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பதவிக்கு எஸ்.பி. வாரியா், செயலா் பதவிக்கு எஸ்.எஸ்.பி. அசோக் ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதால் அவா்கள் போட்டியின்றித் தோ்வாகினா். மகளிா் செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பித்த எம். ஜஸ்டினா, ஏ. செல்வலட்சுமி, என். உஜியானா ஆகிய மூவரும் போட்டியின்றி தோ்வாகினா்.

துணைத் தலைவா் பதவிக்கு ஜி. ஜஸ்டின், எஸ். ராஜா, இணைச் செயலா் பதவிக்கு எம். ஆரோக்கியமேரி, எஸ். இப்ராஹிம், பொருளாளா் பதவிக்கு என். இளவளவன், கே. நான்சி சோபனா ஜெனிபா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். ஆண்கள் செயற்குழு உறுப்பினா்கள் பிரிவில் உள்ள இடங்களுக்கு எம். சின்னமுத்து, எம். ஐயப்பன், கே. முனிஸ்குமாா், எம். முருகன், எம். முத்து தினேஷ், ஈ.சி. ராஜகுமாா் ஆபிரகாம், ராஜ்குமாா், எம்.சபரிநாதன் ஆகிய 8 போ் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.