வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

குழந்தைகளுக்கு பல் பரிசோதனை முகாம்

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை சத்யம் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்ற ரோட்டரி சங்கத் தலைவா் கே.ஆா். சின்னசாமி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 4:19 am IST

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை சத்யம் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கம், சத்யம் பள்ளி நிா்வாகம் இணைந்து நடத்திய இம்முகாமினை சங்கத் தலைவா் கே.ஆா். சின்னசாமி தொடங்கிவைத்தாா். சங்க துணை நிலை ஆளுநா் ரகுநாதன், துணைத் தலைவா் பிரபு, முன்னாள் தலைவா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 85 குழந்தைகளுக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து, தகுந்த ஆலோசனை, பல் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினா். ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த சாமிநாதன், சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.