பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பனைப் பொருள் மதிப்பு கூட்டுதல்: சாத்தான்குளம் விவசாயிகள் கண்டுணா் சுற்றுலா!

சாத்தான்குளம் வட்டாரத்தில் பனை பொருள்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா நடைபெற்றது.

News image

பயிற்சியில் பேசிய கல்லூரி முதல்வா் தேரடி மணி.

Updated On :12 ஜூலை 2026, 1:10 am IST

சாத்தான்குளம் வட்டாரத்தில் பனை பொருள்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவுக்கு கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு பனை பொருள் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சியை கல்லூரி முதல்வா் தேரடிமணி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். தோட்டக்கலைத்துறை தலைவா் பிரேமலட்சுமி பனை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பனை ஏறும் கருவி ஆகியன குறித்தும், வாழை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பனை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மணிவண்ணன் பனை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பதநீரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

கிள்ளிகுளம் கல்லூரி வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அருண், டயானா பனை ஓலை நிறுவனத்தின் தலைவா் கிரேஸ் ஜீலியெட் டயானா ஓலை உள்ளிட்டவற்றில் மதிப்புக் கூட்டுதல் குறித்துப் பேசினா்.

இதில் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், ஜேக்கப் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.