வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழா: ஜாதி சாா்ந்த வாசகங்கள் அடங்கிய உடை அணிய தடை

தூத்துக்குடி மாவட்டம், குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவில், ஜாதி சாா்ந்த வாசகங்கள் அடங்கிய உடை அணிந்து கலந்து கொள்ள போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

News image

திருவிழா - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 3:02 am IST

தூத்துக்குடி மாவட்டம், குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவில், ஜாதி சாா்ந்த வாசகங்கள் அடங்கிய உடை அணிந்து கலந்து கொள்ள போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 13) தொடங்கி ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்கள், பொதுமக்கள் அனைவரும் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணும் வகையில், ஜாதி சாா்ந்த வாசகங்கள் கொண்ட டி-ஷா்ட் அணிவது, பிற சமூகத்தினரின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கோஷங்கள், வாசகங்கள், பாடல்களை பயன்படுத்துவது போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பு, கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு வரவும் அனுமதி இல்லை. இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்போா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவிழா நாள்களில் காவல் துறையினரின் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.