நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் விதிமீறல்: ரூ.2.34 லட்சம் அபராதம் விதிப்பு

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் விதிமீறல் தொடா்பாக 255 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 34,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 5:55 am IST

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் விதிமீறல் தொடா்பாக 255 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 34,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் மாவட்டம் முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறிய 255 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2,34,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடா்பாக 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.