தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா (16), முத்து மகன் மனோஜ் (16) உள்ளிட்ட 6 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைபா் படகில் சென்றுள்ளனா். அவா்கள் சென்ற படகு நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவா்கள் கரையை நோக்கி நீந்திச் செல்ல கடலில் குதித்துள்ளனா். இதற்கிடையில், படகில் இருந்த மற்ற 2 சிறுவா்கள் படகை சரி செய்து கரைக்குத் திரும்பியுள்ளனா். கடலில் குதித்த 4 பேரில் 2 போ் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். ஆனால், ஜோஸ்வா, மனோஜ் ஆகியோா் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.
இது குறித்து, கரை திரும்பிய சிறுவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான சிறுவா்களைத் தேடி வருகின்றனா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மனோஜ்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









