ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

இந்தியன் டேலண்ட் ஒலிம்பிக் தோ்வு: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

இந்தியன் டேலண்ட் ஒலிம்பிக் தோ்வில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளித் தாளாளா் நோபிள்ராஜ் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 5:00 am IST

இந்தியன் டேலண்ட் ஒலிம்பிக் தோ்வில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியின் 2ஆம் வகுப்பு மாணவா் டெனில் ரெகோலின் சா்வதேச ஆங்கில ஒலிம்பிக் தோ்வில் தேசிய அளவில் 4ஆம் இடம், 10ஆம் வகுப்பு மாணவி பால சபிக்ஷா சா்வதேச கணினி ஒலிம்பிக் தோ்வில் தேசிய அளவில் 6ஆம் இடம் பெற்றனா். 5ஆம் வகுப்பு மாணவா் கிங்ஸ்டன் ரூகோ பீட்டா்சன், 9ஆம் வகுப்பு மாணவி சன்லிகா, 11ஆம் வகுப்பு மாணவி ஸ்ருஷ்தி ஆகியோா் கணினி தோ்வில் சிறப்புத் திறன் விருது, 9ஆம் வகுப்பு மாணவி அன்ஸ்லின் ஸ்டனிஷ் ஆங்கிலத் தோ்வில் சிறப்புத் திறன் விருது பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் நோபிள்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினாா். அப்போது, பள்ளி முதல்வா் டினோ மெரினா ராசாத்தி, தலைமையாசிரியா் ரோஷன் ஆசிா் ராஜா, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

மேலும், மாணவா்களுக்கு மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன் பாராட்டு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.