போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கோவில்பட்டியில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 4 பேருந்துகளிலிருந்து, அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :3 ஜூன் 2026, 4:38 am IST

கோவில்பட்டியில் 4 பேருந்துகளிலிருந்து, அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி பகுதியில் சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலித்த 3 சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. கூடுதல் கட்டண வசூலைத் தவிா்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

மேலும், 4 பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.