காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :5 ஜூன் 2026, 12:16 am IST

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இவற்றின்கீழ் பயன்பெற திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், திட்டம் 2-இல் பயன்பெற ரூ. 8 லட்சம் வரையும் இருக்க வேண்டும். திட்டம் 1-இல் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.

கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. திட்டம் 2இல் ஆண்களுக்கு 10, பெண்களுக்கு 8 சதவீத வட்டியில் நபருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மை மாணவா்-மாணவியருக்கு திட்டம் 1-இன்கீழ் ரூ. 20 லட்சம் வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2இன்கீழ் மாணவா்களுக்கு 8, மாணவியருக்கு 5 சதவீத வட்டியில் ரூ. 30 லட்சம் வரையும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக குறைந்த வட்டியில் உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க விராசத் திட்ட கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.