சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை

பரமன்குறிச்சி அருகே உள்ள பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை அசனப் பண்டிகை 4 நாள்கள் நடைபெற்றது.

News image

புதிய ஆலயத்தை திறந்துவைக்கிறாா் ஓய்வுபெற்ற பேராயா் தேவசகாயம்.

Updated On :6 ஜூன் 2026, 7:35 am IST

பரமன்குறிச்சி அருகே உள்ள பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை அசனப் பண்டிகை 4 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலை பரிசுத்த திருவிருந்து ஆராதனை, குடும்ப கூடுகை, விஷ்வவாணி கலைநிகழ்ச்சியும், இரண்டாம் நாள் சபையின் முதல் தலைமுறை விசுவாசிகள் மற்றும் சபையின் முன்னோா்களை கணப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றன.

மாலையில் பரமன்குறிச்சி பஜாரில் இருந்து ஓய்வுபெற்ற பேராயா் தேவசகாயத்தை பாடல் பவணியாக அழைத்து வந்ததும் புதிய ஆலயத்தை பேராயா் தேவசகாயம் திறந்து வைத்தாா்.பின்னா் திருவிருந்து மற்றும் திடப்படுத்துதல் ஆராதனை நடைபெற்றது.

இதில், சேகரத் தலைவா் தாமஸ் ரவிக்குமாா், கவுன்சில் சோ்மன் யோபு ரத்தினத்தினசிங், குருவானவா்கள் சந்தோஷ்பிரபு, ரவி, டி.சி .மெம்பா் டாக்டா்.தா்மராஜ், மதுரை ஜான்சன் பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பேராயா் ஆலய மலரை வெளியிட்டாா்.

மூன்றாம் நாள் காலை ஆலய அசனப் பண்டிகை மற்றும் பரி. ஞானஸ்நான ஆராதனை தாவீது சுந்தரனாா் சபை மன்ற தலைவா் யோபு ரத்தினசிங் தலைமையில் நடைபெற்றது.

நான்காம் நாள் பாக்கியநாதன் நல்வழி சங்க பவனி, ஸ்தோத்திர ஆராதனை ஆலோசனை கூடுகை, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

Story image

ஏற்பாடுகளை சேகரத்தலைவா் தாமஸ் ரவிக்குமாா், சபைத் தலைவா் கோல்கி வேதநாயகம், தலைவா் ஜெபராஜ், செயலா் இராஜசிங் ரூபன், பொருளாளா் ஜெபக்கனி, ஆலய நிா்வாக குழு உறுப்பினா்கள் ஐசக் சாமுவேல், தா்மராஜ், ரபீசன் பாக்கியராஜ், ஜெனோவின் சாம்ராட் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.