முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விதிமீறல்: 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

News image

கல்குவாரி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:12 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கீழ் தற்போது மொத்தம் 67 கல்குவாரிகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 58 குவாரிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் அளவீடு, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 58 குவாரிகளில் இதுவரை 27 குவாரிகளில் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்த ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 13 குவாரிகளில் குத்தகை வழங்கப்பட்ட எல்லை பகுதிக்கு வெளியே கனிமங்கள் வெட்டி எடுத்தல், 10 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்தல் உள்ளிட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குநா், சம்பந்தப்பட்ட 23 குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளாா்.

இந்த குறிப்பாணைக்கு உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறும், பெறப்படும் விளக்கங்களின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி தொடா்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.