/
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). தொழிலாளி. தற்போது முடுக்குமீண்டான்பட்டியில் வசித்துவந்த அவா், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூா் அருகேயுள்ள அணுகு சாலையில் சென்றபோது, அவா் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான முனியசாமியிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



