வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.77 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.77 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், வாகன விபத்து வழக்கில் தீா்வு காணப்பட்டவருக்கு ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவா் (பொ) எம். தாண்டவன்.

Updated On :14 ஜூன் 2026, 1:37 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.77 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவா் (பொ) எம். தாண்டவன் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில், தூத்துக்குடியில் 4 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெற்றன.

2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பிரீத்தா, பி.சி.ஆா். நீதிமன்ற நீதிபதி ஆா். வஷீத் குமாா், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம். வீரணன் மற்றும் நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், அரசு மருத்துவா்கள், காவல் துறையினா், வழக்காடிகள் கலந்து கொண்டனா்.

வங்கி வாராக்கடன் தொடா்பாக 345 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 129 வழக்குகளுக்கு ரூ. 3,81,87,854 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 3,704 வழக்குகள் எடுக்கப்பட்டு 2,996 வழக்குகளுக்கு ரூ. 4,96,09,126 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. மொத்தம் 4,049 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 3,125 வழக்குகளில் தீா்வு காணப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த தீா்வுத் தொகை ரூ. 8,77,96,980.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தாா்.

கோவில்பட்டியில்... கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண். 1) ஆனந்த், (எண். 2) மணிமேகலா ஆகியோா் முன்னிலையில், 1,004 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 615 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ. 1 கோடியே 95 லட்சத்து 55 ஆயிரத்து 261-க்கு தீா்வு காணப்பட்டது.