புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,579 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, ரூ. 11.37 கோடிக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 அமா்வுகளும் மாவட்டம் முழுவதும் 11 அமா்வுகளும் நடைபெற்றன.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான க. பூரணஜெயஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மொத்தம் 4763 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில், 2579 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ. 11.37 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி. பன்னீா்செல்வம், கூடுதல் மாவட்ட நீதிபதி என். எஸ். மீனாசந்திரா, மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. விஜயகுமாா், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஏ. செல்லப்பாண்டியன், தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன், செயலா் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இலுப்பூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சாதத்துநிஷா தலைமை வகித்தாா். தலா ஒரு சிவில், குடும்ப வன்முறை, ஜீவனாம்ச வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டது.
கீரனூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, சாா்பு- நீதிபதி ஏ. தனசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்ட்டா முன்னிலை வகித்தாா். மொத்தம் 879 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 140 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டது. ரூ. 1.89 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, சாா்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மொத்தம் 420 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 216 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டு, ரூ. 64.22 லட்சத்தில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு நீதிபதி சத்யநாராயணமூா்த்தி தலைமை வகித்தாா்.1,199 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 263 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில், ரூ.14.78 லட்சத்துக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
தொடர்புடையது

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.77 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு







