சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குண்டா் சட்டத்தில் சாத்தான்குளம் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 2:27 am IST

சாத்தான் குளத்தில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு பன்னம்பாறை கிராமத்தை சோ்ந்த மாடசாமி மகன் சூரியா(25), தொழிலாளி. இவா், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வனசுந்தா் அளித்த அறிக்கைப்படி, சூரியாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. அபிஷேக்குப்தா பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.