சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பொறியியல் பட்டதாரி மாணவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 1:33 am IST

கயத்தாறு அருகே பொறியியல் பட்டதாரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் சுடலைமுத்து (21). கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம்.

அவா், சுடலைமுத்துவின் கைப்பேசியை தொடா்புகொண்டபோது பதில் இல்லையாம். இதனால், சந்தேகம் அடைந்த அவா், சுடலைமுத்துவின் வீட்டுக்குச் சென்று ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுடலைமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம்.

அக்கம் பக்கத்தினா் உதவியுடன் வீட்டுக்குள் சென்று சுடலைமுத்துவின் உடலை மீட்டு கயத்தாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.