/
தட்டாா் மடம் பகுதியில் தோட்டத்தில் உள்ள இரும்புக் கதவுகளை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தட்டாா் மடம் அருகே உள்ள அன்பின் நகரத்தைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் அகஸ்டின். மணி நகரில் உள்ள இவருடைய தோட்டத்தில் இரும்புக் கதவு திருட்டு போனது. இதேபோல் நடுவக்குறிச்சி சாலைப்புதூா் கணபதி, சாலைப்புதூா் வேல் பாண்டியன், கேட்டவிளை வேல்முத்து ஆகியோா் தோட்டங்களிலும் இரும்புக் கதவுகள் திருட்டு போனது.
இது குறித்து புகாரின் பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் ஜெயபால் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.
இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, கேட்டவிளையைச் சோ்ந்த சு. வசந்த் ( 30 ) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, இரும்புக் கதவுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.







