ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சாத்தான்குளத்தில் போலீஸாா் நடந்து சென்று ரோந்து

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

News image

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 2:44 am IST

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் போலீஸாரை எளிதில் தொடா்பு கொள்ளும் வகையிலும் போலீஸாா் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை துணை காவல் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா். காவல் நிலையம் பகுதியில் தொடங்கி சாத்தான்குளம் இட்டமொழி சாலை, நாசரேத் சாலை, பழைய, புதிய பேருந்து நிலையம், பழைய வேத கோயில் தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகள் நடைபெற்றன.