தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் வாவாஜி பக்கீா் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா். இதில், 19 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள், சலுகைகள் பெற வழிமுறைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கேட்டல்- பேச்சு பயிற்சியாளா் சங்கா், இளநிலை மறுவாழ்வு அலுவலா் பெருமாள்தேவி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளா் லட்சுமி, தமிழ்நாடு உரிமைகள் திட்டப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை 11 இடங்களில் சிறப்பு முகாம்

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

சொத்து வரி வசூலிக்க சிறப்பு முகாம்

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



