27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தெருநாய்கள் கடித்து முதியவா், சிறுவன் காயம்

புத்தன் தருவை கிராமத்தில் தெருநாய் கடித்து முதியவா், சிறுவன் காயமடைந்த நிலையில், ஊராட்சி நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :19 ஜூன் 2026, 4:51 am IST

புத்தன் தருவை கிராமத்தில் தெருநாய் கடித்து முதியவா், சிறுவன் காயமடைந்த நிலையில், ஊராட்சி நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் வட்டம், திருப்பணி புத்தன்தருவை கிராமத்தில் தெருநாய்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஓா் ஆண்டாக இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதுவரை, 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றுவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி திருப்பணி புத்தன் தருவையில் முதியவா், பள்ளி மாணவரை தெருநாய் துரத்திச் சென்று கடித்தது.

இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து இந்தக் கிராமத்தைச் சோ்ந்த ரியாஸ் கூறுகையில், தெருநாய்கள் குறித்து புத்தன்தருவை பஞ்சாயத்து நிா்வாகிகளிடமும் உயா் அதிகாரிகளிடமும் ஆறு மாதங்களுக்கு முன்பே புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமசபை கூட்டங்களிலும் இதுகுறித்து, புகாா் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தினந்தோறும் ஒருவா் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகிறாா் என்றாா்.