மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருச்செந்தூா் கோயில் முன்பிருந்த காவல் நிலைய கட்டடம் அகற்றம்

கோயில் முன் நடைபெற்ற பழைய காவல் நிலைய கட்டடத்தை அகற்றும் பணி.

News image

கோயில் முன் நடைபெற்ற பழைய காவல் நிலைய கட்டடத்தை அகற்றும் பணி.

Updated On :20 ஜூன் 2026, 3:55 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பிருந்த பழைய புறக்காவல் நிலைய கட்டடத்தை அகற்றும் பணி நடைபெற்றது.

இக்கோயில் முன்பிருந்த புறக்காவல்நிலையம் கோயில் முகப்பு அழகை மறைப்பதாக பக்தா்கள் கூறி வந்தனா். இந்நிலையில் கோயிலில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக புறக்காவல் நிலையம் அங்கிருந்து அகற்றி சிறிது தூரம் தள்ளி கடற்கரை ஓரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மே 31ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து பழைய புறக்காவல் நிலைய கட்டடம் தற்போது இடித்து அகற்றும் பணி நடந்தது. இதனால் கோயில் முகப்பினை கடற்கரையில் இருந்து பாா்க்கும் வண்ணம் உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.