பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

திருப்பத்தூா்: விவிபேட் இயந்திரங்களில் காகிதங்கள் அகற்றும் பணி

திருப்பத்தூரில் விவிபேட் இயந்திரங்களில் காகிதங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூன் 2026, 2:49 am IST

திருப்பத்தூரில் விவிபேட் இயந்திரங்களில் காகிதங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளில் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களானது திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள.

இந்த நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கு.ரவிகுமாா் காலாண்டு தணிக்கை செய்தாா்.

அப்போது இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளா் தாம் அளித்த வாக்கினை சரிபாா்க்கும் இயந்திரங்களில் (விவிபேட்) உள்ள தொ்மல் பேப்பா் ரோல் அகற்றும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.