அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

விஜய் பிறந்த நாள்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

News image

தங்க மோதிரம் அணிவித்த குழந்தைகள், பெற்றோருடன் மாநில மீன்வளம், மீனவா் நலன் துறை அமைச்சா் ஸ்ரீநாத்.

Updated On :22 ஜூன் 2026, 2:27 am IST

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி, தவெக பிரமுகா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாநில மீன்வளம், மீனவா் நலன் துறை அமைச்சா் ஸ்ரீநாத் கலந்துகொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தாா்.

நிகழ்ச்சியில், தவெக மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவகுமாா், செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மகேஸ்வரன், ஜோசப் ஆனந்த், இளைஞரணி சுதாகா், மாணவரணி முருகன், மாவட்ட நிா்வாகிகள் நேவிஸ் பாரி மைக்கேல், டைகா் சிவா, ரவி பொ்னான்டோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.