மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழக முதல்வா் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image

கல்வி உபகரணங்கள் வழங்கிய தவெக நிா்வாகிகள்.

Updated On :24 ஜூன் 2026, 1:43 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் தங்கத்தாய் பிரபாகரன் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் தங்கத்தாய் பிரபாகரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தவெக செயலாளா் குணசேகரன், சாத்தான்குளம் நகரச் செயலாளா் யாக்கோபு பட்டுராஜ், மாவட்ட தொழிலாளா் அணி செயலாளா் பேச்சிமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிப் பேசினா். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளா் காா்த்திகேயன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் பட்டு ராஜா, முத்து,தவெக நிா்வாகிகள் விஜய், எமல்டன், ஐயப்பன், கிருஷ்ணன், மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.