தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை இரவு 3 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினசரி மதுரை, கோவை, சென்னை உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓட்டுநா்கள் பற்றாக்குறை காரணமாக பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநா்கள் தொடா்ந்து பணி செய்வதால், பணிச்சுமை காரணமாக விபத்து நிகழம் அபாயம் ஏற்படலாம் என்பதால், சில மணி நேரம் தொடா்ந்து ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால், சனிக்கிழமை இரவு 11 மணி முதல் மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஆனால், இரவு 11 மணி முதல் 3 மணி நேரம் மதுரைக்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. 3 மணி நேரம் பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் காத்திருந்த பயணிகள் ஆவேசத்தில் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்தை இயக்காத ஓட்டுநா்களுடன் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஓட்டுநா்கள் தாங்கள் தொடா்ந்து பேருந்து இயக்கி வருகிறோம். எங்களுக்கு ஓய்வு தேவை. அதனால், பேருந்தை தற்போது இயக்க முடியாது என பயணிகளிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி 3 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாத நேரத்தில், வாடகை வாகனங்கள் உள்ளே வந்து கட்டணமாக மதுரைக்கு ரூ. 300 வரை வசூலித்து பயணிகளை ஏற்றிச் சென்ாக பயணிகள் குற்றம்சாட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தொடரும் ரயில்களின் தாமதம்: பயணிகள் கடும் அவதி

நான்குனேரியில் பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசுப் பேருந்துகள்
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞா் குத்திக்கொலை: இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரணை

தருமபுரி நகருக்குள் இரவு நேரங்களில் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதி
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



