பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பைக்கிலிருந்து குதித்த திருநங்கை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 2:02 am IST

சாத்தான்குளம், ஜூன் 28: சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து குதித்த திருநங்கை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராமன். திருநங்கையான இவா், சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மற்றும் சிலருடன் திசையன்விளை அருகே உள்ள கோயில் கொடை விழாவுக்கு சென்றாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு செல்ல சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபருக்கும், ராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்திலிருந்து ராமன் குதித்தாராம். பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாகனம் ஓட்டிய நபா் நிற்காமல் சென்று விட்டாராம்.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வனசுந்தா், உதவி ஆய்வாளா் சிவராஜன் ஆகியோா், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த குமாரிடம் விசாரணை நடத்தினா்.

போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.