தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 7:59 pm

கோவில்பட்டி அருகே இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பூபாண்டி (22), ஆட்டோ ஓட்டுநா். இவா் 25 வயது இளம் பெண்ணை அடிக்கடி பின்தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்ததோடு, அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பூபாண்டியை கைது செய்தனா்.