ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புதூா் பாண்டியாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம்

News image
போட்டியில் சீறிப் பாயும் மாட்டு வண்டிகள்.
Updated On :1 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பாண்டியாபுரத்தில் செல்வமுத்து விநாயகா் கோயில் 37ஆவது ஆண்டு வருஷோபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலா் பங்கேற்றனா்.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பிடித்த சீவலப்பேரி, துா்காம்பிகை வண்டிக்கு ரூ. 2 லட்சம், 2ஆவது இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம், முத்தையா திருப்பதி வண்டிக்கு ரூ. 1.50 லட்சம், 3ஆவது இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்டம், வேலாங்குளம் கண்ணன் வண்டிக்கு ரூ. 1 லட்சம், 4ஆவது இடம் பிடித்த மதுரை, அவனியாபுரம் மோகன் வண்டிக்கு ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

24 வண்டிகள் கலந்துகொண்ட சின்ன மாட்டுவண்டி போட்டியில், முதலிடம் பிடித்த தேனி மாவட்டம், கம்பம் ரஹீம் ராவுத்தா் வண்டிக்கு ரூ. 1 லட்சம், 2ஆவது இடம் பிடித்த பேரூரணி முருகன் வண்டிக்கு ரூ. 75,000, 3ஆவது இடம் பிடித்த மேலசெல்வனூா் சத்தியமுா்த்தி வண்டிக்கு ரூ. 50,000, 4ஆவது இடம் பிடித்த சீவலப்பேரி, துா்காம்பிகை வண்டிக்கு ரூ. 25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும், வண்டி சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.