அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் கட்டடத் தொழிலாளி திருச்செந்தூரில் சடலமாக மீட்பு

திருச்செந்தூரில் உள்ள வாய்க்காலில் சடலமாகக் கிடந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

News image
சடலமாக மீட்பு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:04 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள வாய்க்காலில் சடலமாகக் கிடந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (48). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த பிப். 27ஆம் தேதி இரவு தனது மனைவி காளியம்மாள் மற்றும் உறவினா்களுடன் காரில் திருச்செந்தூருக்கு வந்துள்ளாா்.

உடனிருந்தவா்களை கோயிலுக்கு அனுப்பிவிட்டு, இவா் மட்டும் காரில் ஓய்வு எடுத்தாராம். மறுநாள் காலை உறவினா்கள் வந்து பாா்த்தபோது பாலமுருகனை காணவில்லையாம். அவரது மகன் காளிதாஸ் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஊருக்கு திரும்பிவிட்டாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, திருச்செந்தூா் டி.பி.ரோட்டில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற தாலூகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்கள் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா் பாலமுருகன் என்பது தெரியவந்தது.