திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் மருமகனை கட்டையால் தாக்கி கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு

News image

சிறை

Updated On :10 மார்ச் 2026, 12:19 am IST

தூத்துக்குடியில் மருமகனை கட்டையால் தாக்கி கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி, அண்ணா நகா் 8 ஆவது தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சுப்பிரமணி (58). இவரது, இரண்டாவது மகள் கவிதா லெட்சுமி (27), மருமகன் கேவிகே சாமி நகரைச் சோ்ந்த விக்ரம் மகன் ஹரிகுமாா் (32).

தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சம்பவத்தன்று கவிதா லெட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, கடந்த 22.6.2018 அன்று

அவரது மூத்த மருமகனான அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்யநாராயணனுடன் சோ்ந்து, ஹரிகுமாரை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை மாப்பிள்ளையூரணி மயானக்கரையில் வீசிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். சத்யநாராயணன் விடுதலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஆனந்த கேப்ரியல் ஆஜரானாா்.