தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், இந்தியாவிலேயே முதன்முதலாக ‘துறைமுக மெய்நிகா் மாதிரி செயலி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த பிப். 23ஆம் தேதி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மெய்நிகா் மாதிரி செயலி, துறைமுகத்தின் கப்பல் தள பயன்பாடு, கப்பல் நகா்வுகள், பளு தூக்கிகளின் பயன்பாடு, கப்பல் தளத்தின் சரக்கு கையாளும் திறன் ஆகியவற்றை நேரடிக் காட்சி வடிவில் வழங்கி, செயல்பாடுகளை உடனடியாக கண்காணிக்க உதவுகிறது. சரக்கு கையாளும் உபகரணங்களுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்பு பராமரிப்பை அறிவிக்கிறது. இதனால், சரக்கு கையாளும் செயலிழப்பு நேரத்தை குறைத்து, செயல்பாட்டு நம்பகத்தன்மையை மேம்படுத்த இயலும்.
துறைமுகத்தை அறிவாா்ந்த மற்றும் திறமையான கடல்சாா் நுழைவாயிலாக மாற்றுவதற்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துறைமுக மெய்நிகா் மாதிரி செயலியை செயல்படுத்துவது துறைமுகத்தின் நவீனமயப்படுத்தல் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். செயற்கை நுண்ணறிவு, இணைய தொழில்நுட்பம் மற்றும் நேரடி தகவல் பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த முயற்சி செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், துறைமுகத்திற்குள் கப்பல்கள் வந்து திரும்பும் நேரத்தைக் குறைக்கவும், துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் உதவும். இதன் மூலம் துறைமுகம் உலகளாவிய அறிவாா்ந்த துறைமுக தரநிலைகளுக்கு முன்னேறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை!
இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!

மாதாந்திர பயனாளா்களுக்கு ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய மாற்றம்

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


