தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேடநத்தம் மாணவி கொலைக்கு நீதி கேட்டு 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:25 pm

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தூக்கிலிடவும் வலியுறுத்தி திருச்செந்தூரில் யாதவ அமைப்பினா் 2ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் முன் யாதவா் இளைஞரணி கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை மாலை உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்திற்கு, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சுந்தா் தலைமை வகித்தாா். நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலா் வன்னிய ராஜா, மேலத்தெரு யாதவ மகா சபை தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள், வியாபாரிகள், இளைஞரணியினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க. விஜயகுமாா் தலைமையில் மாவட்டத் தலைவா் கோட்டை மணிகண்டன், அதிமுக ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுரேஷ் பாபு, நகர பொருளாளா் வள்ளிராஜ், ஒன்றிய அவைத் தலைவா் லிங்ககுமாா், ஒன்றிய இளைஞா் பாசறை துணைச் செயலா் செல்வன், இளைஞா் பாசறை நகரச் செயலா் வீரமந்திரகுமாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவா் நவமணிகண்டன், நகரத் தலைவா் செல்வகுமரன் மற்றும் தவெகவினரும் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சனிக்கிழமை இரவு தாசில்தாா் தங்கமாரி, கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் ஆகியோரும், ஞாயிற்றுக்கிழமை மதியம் கோட்டாட்சியா் கெளதம், டிஎஸ்பி மகேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.