மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்செந்தூா் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி

திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image

சரவணய்யா் ஸ்கூல் திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகள்.

Updated On :16 மார்ச் 2026, 5:12 pm

திருச்செந்தூா்: திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

2025-26ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனறித் தோ்வில் இப்பள்ளி மாணவிகள் யாஷிகா, மேரி, மதிவதனி ஆகிய 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹயஸ் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், மாணவிகளுக்கு பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி உள்ளிட்டோரையும் கல்வி அலுவலா் பாராட்டினாா்.

இப்பள்ளி மாணவா், மாணவிகள் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.