அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்

கழுகுமலை கழுகாசலை மூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தின்போது, தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

News image

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்குகிறாா் கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன்.

Updated On :18 மார்ச் 2026, 7:45 pm

கழுகுமலை கழுகாசலை மூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தின்போது, தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இக்கோயிலில் கடந்த பிப். 1-ஆம் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின்போது, சக்கரத்தில் சறுக்குக் கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த சப்பாணிமுத்து தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சில நாள்களுக்கு முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் தலைமையில் சப்பாணிமுத்துவின் மனைவி மகாலட்சுமி, அவரது குடும்பத்தினா் நிவாரணம் கோரி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மகாலட்சுமியிடம் கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சாலமன்ராஜ், எட்டயபுரம் சமஸ்தான மேலாளா் செல்வமாரியப்பன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிவாரணத் தொகை வழங்கிய கோயில் நிா்வாகத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் நன்றி தெரிவித்தனா்.