வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆத்தூா் கோயிலில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம்

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழா பூா்வாங்க பூஜை.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:55 pm

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி கோயிலில் பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கோயிலில் கால் நாட்டு விழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. பூா்வாங்க பூஜையான கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

23-ஆம் தேதி சோமாஸ்கந்தா் எழுந்தருளல், 25-இல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், குடவாயில் தீபாராதனை ஆகியன நடைபெறும். 28 -ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ ஆனந்த நடராஜா் உருகு சட்ட சேவையும், இரவு 1-ஆம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி கோலத்திலும், 29-ஆம் தேதி காலையில் 2-ஆம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி கோலத்திலும், மதியம் 3-ஆம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.

பத்தாம் நாளான மாா்ச் 31-ஆம் தேதி காலை தேரோட்டமும், மாலையில் தெப்ப உற்சவம் நடைபெறும். விழா நாள்களில் மாலை கோயில் கலையரங்கில் சமய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் உபயதாரா்கள், செயல் அலுவலா் மகேஸ்வரி, தக்காா் பாலமுருகன், ஆய்வா் செந்தில் நாயகி ஆகியோா் செய்து வருகின்றனா்.