அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் ரூ.13.30 லட்சம் பறிமுதல்

திருச்செந்தூா் ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனையை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் க.இளம்பகவத். உடன், மாவட்ட எஸ்.பி. சி. மதன்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:48 pm

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி ஸ்டேட் பாங்க் காலனி சாலையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.13.30 லட்சத்தை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஓட்டப்பிடாரம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காமாட்சி தலைமையிலான பறக்கும் படையினா், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி சாலையில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தனியாா் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.13.30 லட்சத்தை அவா்கள் பறிமுதல் செய்து, பின்னா் அந்தப் பணத்தை தூத்துக்குடி துணை வட்டாட்சியா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.

ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு: இதனிடையே, திருச்செந்தூா் ரவுண்டானா, சிதம்பரநகா் சக்தி விநாயகா் பள்ளி, டூவிபுரம் பெல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்டவற்றின் அருகே பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் உடனிருந்தாா்.